ஜப்பானில் மீண்டும் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’!

 

ஜப்பானில் மீண்டும் ரிலீசாகும் சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படம் மீண்டும் ஜப்பானில் ரிலீசாகவுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படம் மீண்டும் ஜப்பானில் ரிலீசாகவுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு, ரகுவரன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த ‘முத்து’ திரைப்படம் தமிழகத்தை காட்டிலும் ஜப்பானில் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்தியாவை போல் ஜப்பான் நாட்டில் சூப்பர் ஸ்டாருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை காண ஜப்பான் ரசிகர்கள் சென்னைக்கு வரும் நிகழ்வுகளும் உண்டு.

இந்நிலையில், டிஜிட்டல் செய்யப்பட்ட ’முத்து’ திரைப்படத்தை வரும் நவ.23ம் தேதி டோக்யோவில் மீண்டும் ரிலீசாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘முத்து’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில், இந்தியாவில் சூப்பர் ஹிட்டான ‘முத்து’ திரைப்படம் கடந்த 1998ம் ஆண்டு ‘முத்து: ஒடொரு மஹாராஜா-டான்சிங் மஹாராஜா’ என்ற தலைப்பில் சப்டைட்டிலுடன் ஜப்பானில் ரிலீசானது. சுமார் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம், ஹாலிவுட் அல்லாத பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. ஜப்பான் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த முத்து திரைப்படம் இந்தியா-ஜப்பான் இடையிலான கலை தூதராக இருந்தது. இதனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு பேசினார்.

rajinifans

தற்போது ‘முத்து’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக வரும் நவ.23ம் தேதி டோக்கியோவில் இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்பட்ட இப்படத்தின் ஒரிஜீனலை கெடுக்காமல் புதுமைப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.29 தேதி ரிலீசாகவுள்ள நிலையில், நவ.23ம் தேதி ஜப்பான் ரசிகர்களை மகிழ்விக்க ‘முத்து’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.