ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளாரா?

 

ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளாரா?

பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானில் அவசரநிலையை பிரகடனப்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோக்கியோ: பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானில் அவசரநிலையை பிரகடனப்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 3654 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டோக்கியோவில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் 575 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

japan

ஜப்பானில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அவசரநிலையை பிரகடனப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் கொரோனா பாதிப்பு குறைவுதான் என்றாலும் இந்த உயிர்க்கொல்லி தொற்று பரவல் மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்காக அவசரநிலை பிரகடனப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.