ஜப்பானில் எளிமையாக நடத்தப்பட்ட மன்னர் முடிசூட்டு விழா!!

ஜப்பானில் எளிமையாக நடத்தப்பட்ட மன்னர் முடிசூட்டு விழா!!

ஜப்பானில் ஏற்பட்ட புயல் தாக்குதல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் மன்னர் முடிசூட்டு விழா நடந்தேறியது. புதிய மன்னராக நருஹிட்டோ முடிசூட்டப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் 125வது மன்னராக பொறுப்பில் இருந்து வந்த அகிஹிட்டோ வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக் கோளாறுகள் காரணமாக சரிவர பொறுப்புகளை கவனிக்க முடியவில்லை. இதனால் பதவி விலகுவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் நாட்டின் சட்ட திட்டத்தில் மன்னர் பதவி விலகுவதற்கான எந்தவித சட்டமும் இல்லை. 

japan

ஆதலால், கடந்த 2017-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பாராளுமன்றத்தில் மன்னர் பதவி விலகுவதற்கு ஏற்றவாறு புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அகிஹிட்டோ பதவி விலகினார். இவர் பதவி விலகிய இரண்டாவது நாளில் நருஹிட்டோ மன்னர் பொறுப்பை ஏற்று தனது கடமையை கவனித்து வந்துகொண்டிருந்தார். 

இந்நிலையில், அரசு முறைப்படி இம்பிரியல் அரண்மனையில் உள்ள அரியாசனத்தின் நாற்காலியில் அமர வைக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. கடந்த வாரம் ஹகிபிஸ் புயல் தாக்குதலின் காரணமாக ஜப்பான் நாடு ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, அதன் தலைநகர் டோக்கியோ மிகவும் பாதிக்கப்பட்டு 75,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர். 

புயல் அறிகுறி இருப்பதற்கு முன்பாகவே இந்நிகழ்வு திட்டமிடப்பட்டது. ஆதலால், திட்டமிட்டபடி எந்தவித மாற்றமும் இன்றி நடந்தது. புயல் தாக்குதலின் காரணமாக மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், தென் கொரிய பிரதமர் லீ நாக்-யோன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

japan

கொட்டும் மழையிலும் குடையைப் பிடித்துக்கொண்டு மன்னர் பதவி ஏற்றதை வீர முழக்கமிட்டு பொதுமக்கள் கண்டு களித்தனர். பதவியேற்ற பிறகு உறுதிமொழி அளித்த மன்னர் நருஹிட்டோ, ஜப்பான் நாட்டை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதிலும், அதன் சின்னமாக விளங்கி பக்கபலமாக அனைத்து கஷ்ட நஷ்டங்களுக்கு உடன் இருப்பேன் என்று உறுதி மொழி அளிக்கிறேன் என பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

இவருக்கு உரிய மரியாதை செலுத்திய ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மன்னருக்கு அரசு பக்கபலமாக இருக்கும் என்றும், மன்னர் பல்லாண்டு வாழ்க என்றும் முழக்கமிட்டார்.

புயலால் தாக்கப்பட்ட மக்கள் சீரான நிலைக்கு திரும்பிய பிறகு, நவம்பர் 10ஆம் தேதி மன்னரின் பொதுமக்கள் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது.

-vicky