ஜன.9 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் !

 

ஜன.9 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் !

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்தலாம் என்பது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து,  சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்தலாம் என்பது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ttn

அந்த ஆய்வுக் குழுக் கூட்டத்தில் ஜனவரி 9 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ஆளுநர் உரையின் மீது 2 நாட்கள் விவாதமும் அதற்கான பதிலுரை 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

ttn

நாளை காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் என்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் அதாவது வியாழக்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அன்று எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார். அதன் பின்னர்,  சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.