ஜன. 6 முதல் டொயோட்டோ, ஃபார்ச்சூனர் பிஎஸ்6 கார்கள் ! ரகசிய முன்பதிவு !

 

ஜன. 6 முதல் டொயோட்டோ, ஃபார்ச்சூனர் பிஎஸ்6 கார்கள் ! ரகசிய முன்பதிவு !

டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் பிஎஸ் 6 கார்களுக்கான முன்பதிவு ஜனவரி 6ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

crysta

பிஎஸ்6 தரத்திற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ள இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களுக்கான முன்பதிவுகள் துவங்க உள்ளதாக டொயோட்டா நிறுவனம் கூறியிருந்தது. தற்போது புதிய கார்களுக்கான முன்பதிவுகள் டீலர்ஷிப்களில் ரகசியமாக தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.50,000ல் இந்த கார்களுக்கான முன்பதிவை டீலர்ஷிப்கள் ஏற்பதாக தெரிகிறது. இந்த தகவலை புனேவில் டீலர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். 2020 மாடல்களின் டெலிவரிகள் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக டொயோட்டா நிறுவனம் கூறியிருந்தது.

toyato

டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த மாடல்களாக விளங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களின் பிஎஸ்4 வெர்சன்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது. இதனால் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவுகள் ரகசியமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதிக்கு முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது.

toyto

மேலும் யாரிஸ் பிஎஸ்6 மாடலின் முன்பதிவையும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர். இன்னோவா க்ரிஸ்ட்டா இந்த பிஎஸ்6 அப்டேட்டால் ரூ.1.5 லட்சம் வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது. விலை அதிகரிப்பிற்கு காரணம், க்ரிஸ்ட்டாவின் பிஎஸ்6 வேரியண்ட்டில் புதியதாக கேட்டலிடிக் ரெடக்ஷன் தொழில்நுட்பத்தையும் புதிய டீசல் ஃபில்டரையும் பொருத்தியிருப்பது தான் என தெரியவந்துள்ளது.  

மேலும் ஏப்ரல் 1 முதல் டீசல் வேரியண்ட்டுடன் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் மட்டும் தான் விற்பனையாகவுள்ளன. யாரிஸ், க்ளான்ஸா போன்ற கார்களும் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் தான் பெற்று பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ளன. 

toyato

டொயோட்டா மாடல்களின் டிசம்பர் மாதத்திற்கான விற்பனை 38 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவு ரகசியமாக நடத்துப்படுவது, மீதி தேங்கியிருக்கும் பிஎஸ்4 கார்களை விற்க டீலர்ஷிப்கள் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.