ஜன.10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு !

 

ஜன.10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு !

தேர்தல் பணிகள் முடிவடைந்ததால் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்பு துண்டு ஆகிய பரிசுப் பொருட்களுடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசை, தேர்தல் முடியும் வரை கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, தேர்தல் பணிகள் முடிவடைந்ததால் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

வழக்கமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வெள்ளிக் கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஆனால், 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 10 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய 16ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.