ஜனவரி 27-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

 

ஜனவரி 27-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வரவுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வரவுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வருவார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று தான் கிடைத்துள்ளது. அதன்படி, ஜனவரி 27-ம்தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் மதுரை வருகை மூலம், தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க உதவும். மோடியின் வருகை தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும்.

தற்போது மோடியின் வருகை, மக்களவை தேர்தலுக்கு தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். கூட்டணி பற்றி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம். திருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் குறித்து பின்னர் சொல்கிறேன்.  திருவாரூர் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தயக்கம் உள்ளது என்பது ஸ்டாலின் பேச்சில் தெரிய வருகிறது என்றார்.

பிரதமரின் மதுரை பயணத்தின் போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டல், தனுஷ்கோடிராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை, மதுரைசென்னை இடையிலான அதிவே தேஜஸ் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் துவக்கி வைப்பார் என தெரிகிறது.