ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

 

ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்பு இந்திய டெலிகாம் துறையில் ஒரு அசாத்திய மாற்றம் ஏற்பட்டது. அந்நிறுவனம் அடியெடுத்து வைத்த வேகத்தில் இலவச வாய்ஸ்கால், இலவச மெசேஜ், இலவச 4ஜி டேட்டா ஆகியவற்றை அள்ளிக் கொடுத்து கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்பக்கம் சாய்த்தது. இதனால் பல டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவில் நாளுக்கு நாள் ஜியோ சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்தத் தகவல் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேருக்கும் மேலாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக உயர்ந்துள்ளது.