ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி

 

ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி: திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்குப் பின் அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த அதிமுகவின் ஏ.கே.போஸும் சமீபத்தில் உயிரிழந்தார். அந்த தொகுதியும் தற்போது காலியாக உள்ளது.

அதுமட்டுமின்றி, அதிமுகவிற்கு எதிராகத் தினகரனுடன் இணைந்து செயல்பட்டதாக தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில், தகுதிநீக்கம்  செல்லும் என்றும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரிக்கு முன்னதாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தகுதி நீக்கத்திற்கு எதிராகத் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 18 தொகுதிகளையும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.