ஜனன திதி தோஷம் என்றால் என்ன?

 

ஜனன திதி தோஷம் என்றால் என்ன?

ஜனன திதி தோஷம்: குழந்தை பிறப்பால் அந்த  குடும்பத்தினருக்கு உண்டாகும் பிறப்பு திதி தோஷம் பற்றி இந்த பதிவில் பார்போம்.ஒரு குழந்தை ஜனனம் ஆகும் காலம் ஜோதிட அடிப்படையில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

baby

ஏன்னென்றால் அந்த ஜனன காலத்தினை வைத்துதான் ஜோதிடத்தில் கூறப்படும் லக்னம் மற்றும் ராசி மற்றும் நட்சத்திரத்தினை அறிந்துகொள்ளமுடியும். இவைகளை வைத்துதான் அந்த குழந்தையின் எதிர்காலம் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் எதிர்காலத்தினை ஜோதிடர்கள் கணித்து கூறுவது வழக்கம். 

baby

ஜோதிடத்தை அடிப்படையாக கொண்ட ஜோதிட கூற்றுகள் சிலவற்றை இப்பொழுது பார்போம். குழந்தையின் ஜனன காலம்,கண்டறிவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் குழந்தை பிறந்த கிழமை மற்றும் அந்த குழந்தை பிறந்த திதி இவைகளை கணக்கிடுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

குழந்தை பிறந்த கிழமை மற்றும் திதியை அடிப்படையாக வைத்து நம் முன்னோர்கள் பிறப்பு தோஷம் பற்றி பல்வேறு கிரந்தங்களில் ஜோதிட பலன்களை கூறியுள்ளனர்.எந்த கிழமை,எந்த திதியில் ஒரு குழந்தை ஜனனம் செய்கின்றதோ அதனை அடிப்படையாக கொண்டு திதி தோஷம் அமைகின்றது.

baby

1.ஞாயிறு – துவாதசி திதி, சப்தமி திதி.

2.திங்கள் – ஏகாதசி திதி, சஷ்டி திதி.

3.செவ்வாய் – பஞ்சமி திதி, சப்தமி திதி.

4.புதன் – துதியை திதி, அஷ்டமி திதி.

5.வியாழன் – சஷ்டி திதி, நவமி திதி.

6.வெள்ளி – அஷ்டமி திதி, தசமி திதி.

7.சனி – நவமி திதி, ஏகாதசி திதி.

baby

உங்களது குழந்தை மேற்கூறிய நாளும்,திதியும் கூடிய நாளில் பிறந்திருந்தால் உங்கள் குழந்தைக்கு பிறப்பு திதி தோஷம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

Baby

இந்த கடுமையான தோஷத்தினால் பிறந்த குழந்தை மற்றும் அதன் பெற்றோர்கள் வாழ்வில் பல இன்னல்களை அடைவார்கள் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ஏற்படும் துன்பங்களை நீக்க சரியான பரிகாரங்களை செய்யவேண்டியது அவசியமாகும்.

 

 

#TithisandEffectsonPersonalities,  #Thithi  #Dhosam  #பிறப்புதிதிதோஷம் #Jothidam