ஜனநாயகம் சமரசம் செய்யப்படுவதாக பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி…

 

ஜனநாயகம் சமரசம் செய்யப்படுவதாக பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி…

கர்நாடகாவில், ஜனநாயகம் இதுவரை இல்லாத அளவு சமரசம் செய்யப்படும்போது தான் பணியில் தொடர்வது நியாயமற்றது என ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2009 கர்நாடக பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ். சசிகாந்த் செந்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் தக்ஷினா கன்னடா மாவட்ட துணை ஆணையராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜினாமா முடிவு முழுக்க முழுக்க தனது சொந்த முடிவு என்று கூறும் சசிகாந்த் செந்தில், தனது ராஜினாமா கடிதத்தில் ஜனநாயகத்தின் அடிப்படை தொகுப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு சமரசம் செய்யப்படும்போது நான் பணியில் தொடர்ந்து நீடிப்பது நியாயமற்றது. அதனால் எனது பணியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்ணன்  கோபிநாதன்

வரவிருக்கும் நாட்கள் தேசத்தின் அடிப்படை துணிவுக்கு மிகவும் கடினமான சவால்களை அளிக்கும் என்றும், பதவியில் இல்லாவிட்டாலும் அனைவரின் வாழ்க்கையை சிறந்தாக்குவதில் நான் என் பணியை சிறப்பாக செய்வேன் என உணருகிறேன் என செந்தில் கூறியுள்ளார்.

எஸ் சசிகாந்த் செந்தில்

லட்சக்கணக்கான மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறி, கடந்த மாதம்தான் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம்  வழங்கினார். இந்நிலையில், மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பதவி விலகி இருப்பது சர்ச்சை கிளப்பியுள்ளது.