‘ஜங்கிள் புக்’ படத்தின் தழுவலா ‘பஹீரா’ !?

 

‘ஜங்கிள் புக்’ படத்தின் தழுவலா ‘பஹீரா’ !?

சல்மான் கான் வைத்து ‘தபாங் 3’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரபுதேவா. பாலிவுட்டில் நடன இயக்குனாராகவும், இயக்குனராகவும் மிகவும் பிசியாக உள்ள பிரபுதேவா இப்போது மறுபடியும் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பிரபு தேவா நடித்துள்ள ‘பஹீரா’ என்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் பிரபு தேவா மொட்டைத்தலை மற்றும் மூன்று கண்கள் இருப்பது போல உள்ள தோற்றத்தில் இருப்பது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

சல்மான் கான் வைத்து ‘தபாங் 3’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரபுதேவா. பாலிவுட்டில் நடன இயக்குனாராகவும், இயக்குனராகவும் மிகவும் பிசியாக உள்ள பிரபுதேவா இப்போது மறுபடியும் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

prabu-deva.jpg1

மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அடல்ட் படங்களில் இயக்குவதில் பிரபலமான  இவர் தற்போது திரில்லர் களத்தில் குதித்திருக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், படத்தின் முக்கால்வாசி பகுதி எடுத்து முடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

பிரபு தேவா அணிந்திருக்கும் கண்ணாடியில் ‘ஜங்கிள் புக்’ படத்தின் காட்சி தெரியும். இதைப் பற்றி கூறிய இயக்குனர், இந்த படத்தில் பிரபுதேவாவின் கேரக்ட்டர் ஜங்கிள் புக் படத்தின் பஹீராவை வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.