ஜக்கி வாசுதேவிற்கும் ‘லாபம்’ படத்திற்கும் சம்பந்தமில்லை… மறுப்பு தெரிவிக்கிறது ஈஷா யோகா!

நமது டாப் தமிழ் நியூஸில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் ‘லாபம்’ படத்தைப் பற்றிய கட்டுரையில், எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தின் வெளியான புகைப்படங்களில், நடிகர் விஜய் சேதுபதியின் தோற்றம் ஏறத்தாழ ஜக்கி வாசுதேவை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், அப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஜக்கி வாசுதேவ்வின் கேரெக்டரில் நடிக்கிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வெளியிட்டிருந்தோம்.

vijaysethupathi

இந்நிலையில், ஈஷா யோகா சார்பில், ‘லாபம்’ படத்திற்கும் ஜக்கி வாசுதேவ்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்றும், இனி ஜக்கி குறித்த செய்திகளின் விளக்கங்களுக்கு தங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு மறுப்பு செய்தி அனுப்பியிருக்கிறார்கள். 

mail

டாப் தமிழ் நியூஸ் இணையதளத்தின் நோக்கம் உண்மையான செய்திகளை உடனுக்குடன் வாசகர்களுக்குத் தருவது மட்டுமேயன்றி, எந்தவொரு தனிப்பட்ட நபரின் மீதும் வெறுப்பை உமிழ்வதல்ல என்பதை இச்சமயம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உண்மை நிலையை வாசகர்கள் அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் அனுப்பிய மறுப்பு கடிதத்தையும் இங்கு பிரசுரித்திருக்கிறோம்.