ஜக்கியின் நோக்கம் நதி மீட்பல்ல, பணமும் புகழும்தான் – தண்ணீர் மனிதன் ராஜேந்திரசிங்

 

ஜக்கியின் நோக்கம் நதி மீட்பல்ல, பணமும் புகழும்தான் – தண்ணீர் மனிதன் ராஜேந்திரசிங்

இந்தியாவின் தண்ணீர் மனிதர் என பேரும் புகழும்பெற்ற ராஜேந்திர சிங் கேள்வி எழுப்புகிறார். ”என் வாழ்நாளில் மறைந்துபோன 9 நதிகளை மீட்டெடுத்திருக்கிறேன், ஆனால் அந்த ஒன்பதில் எந்த ஒரு நதியையும் மிஸ்ட் கால் கொடுத்தோ, பேரணி சென்றோ மீட்டெடுக்கவில்லை” என கடுமையாகச் சாடும் ராஜேந்திர சிங், ஜக்கியின் நோக்கம் குறித்தே சந்தேகம் எழுப்புகிறார்.

ரிடையர்ட் நடிகர்களை எல்லாம், கமல் உள்பட, வரிசையாக நிற்கவைத்தும் முட்டிபோடவைத்தும் ஒன்றுக்கு ஒன்று சைஸில் விளம்பர போர்ட் ஒன்றை கையில் கொடுத்து ’ரேலி ஃபார் ரிவர்ஸ்’, ’ஒரு மரத்துக்கு 42 ரூபாய் வீதம், 10,000 கோடி ரூபாய் தாருங்கள், 240 கோடி மரங்களை காவிரி கரையோரம் நட்டு, காவிரியை மீட்கிறேன்’ என ஜக்கி வாசுதேவ் கிளம்பியிருக்கிறார். மரம் நட்டால், காவிரியை மீட்கமுடியுமா? இந்த கேள்வியை நாம் கேட்கவில்லை. இந்தியாவின் தண்ணீர் மனிதர் என பேரும் புகழும்பெற்ற ராஜேந்திர சிங் கேள்வி எழுப்புகிறார். ”என் வாழ்நாளில் மறைந்துபோன 9 நதிகளை மீட்டெடுத்திருக்கிறேன், ஆனால் அந்த ஒன்பதில் எந்த ஒரு நதியையும் மிஸ்ட் கால் கொடுத்தோ, பேரணி சென்றோ மீட்டெடுக்கவில்லை” என கடுமையாகச் சாடும் ராஜேந்திர சிங், ஜக்கியின் நோக்கம் குறித்தே சந்தேகம் எழுப்புகிறார்.

Rally for Rivers supported by many

சில மாதங்களுக்கு முன்பு ஈஷா ஃபவுண்டேஷனின் நதிகள் மீட்பு விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றில் தன் ஆதரவை அளித்து ராஜேந்திர சிங் வீடியோ பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் தன்னுடைய கருத்துகள் எடிட் செய்யப்பட்டு, வேறுவகையில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று அப்போதே பிரச்னை கிளப்பினார் சிங். ”மிஸ்ட் கால் கொடுப்பதாலோ, கோஷம் போடுவதாலோ ஒன்றும் நடக்கப்போவதில்லை. எப்போதுமே ரிவர் ஃபார் ரேலிக்கு என் ஆதரவு கிடையாது. ரேலி ஃபார் ரிவர்ஸ் இயக்கம் நதிகளுக்காக நடத்தப்படவில்லை. நிலத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காவும் நடத்தப்படும் கண்ணாமூச்சி ஆட்டம் இது” என ஜக்கியை வறுத்தெடுத்திருக்கிறார் தண்ணீர் மனிதன். ராஜேந்திர சிங் நதிகளை மீட்டெடுத்து வாழும் உதாரணமாக இருக்கிறார். நதிகளை இணைப்பதற்காக மூன்று கோடி ரூபாய் காரில் இந்தியா முழுக்க சுற்றிவந்து மிஸ்ட் கால்களை மட்டும் எண்ணியவர். யார் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை வாசர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.