ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் திரைக்கு வரும்! அதிரவைக்கும் போஸ்டர்

 

ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் திரைக்கு வரும்! அதிரவைக்கும் போஸ்டர்

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் நடிக்கும் 40வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.இப்படத்தின்  மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் உழைப்பாளர்கள் தினமான மே 1-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகியுள்ளது.

 

 

இந்நிலையில் படம் வெளியாகவிருந்த இன்று ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.  அதில் உலகம் குணமடைந்ததும் அதாவது ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் என்று தலைப்பிட்டு விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கொடிய வைரஸ் தொற்று பரவல் இல்லாமல் இருந்தால் இன்று ஜகமே தந்திரம் திரைக்கு வந்திருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். அதே போஸ்டரை நடிகர் தனுஷும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்