சோஷியல் மீடியா தகவலை கண்காணிக்கவும் அதிகாரம்! – மத்திய அரசு சொல்கிறது

 

சோஷியல் மீடியா தகவலை கண்காணிக்கவும் அதிகாரம்! – மத்திய அரசு சொல்கிறது

சோஷியல் மீடியாவில் பகிரப்படும் தகவலை கண்காணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அவரவர் விருப்பப்படி கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் பகிரப்படும் தகவலை கண்காணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அவரவர் விருப்பப்படி கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சில நேரங்களில் கருத்தை கூறுகிறேன் என்று உண்மையில்லாத விஷயங்களையும், வதந்திகளையும் பரப்பிவிடுகின்றனர்.

social media

இதை சமூக ஊடக நிறுவனங்கள் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், சமூக ஊடகங்கள் உளவு பார்க்கப்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்தார். அப்போது அவர், “பொதுமக்களின் நன்மைக்காக, சட்டத்திற்கு உட்பட்டு டிஜிட்டல் தகவல்கள் தேவையெனில் இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. குறியீடு மூலமாக பேசிக்கொண்டால், அதை இடைமறித்து அதன் அர்த்தத்தைக் கண்டறிய அரசு முயற்சிக்கும்.

social media

இப்படி இணையம், தனிநபர் கணினியில் உருவாக்கி, சேமிக்கப்படும் தகவலைக் கூட கண்காணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இதை செய்ய குறிப்பிட்ட அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
யாரும் நம்மை கவனிக்கவில்லை என்ற எண்ணத்திலேயே பல வேண்டாத கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அமைச்சரின் இந்த பதில் அப்படி பதிவிடுபவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.