சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கார்த்திகை பெருவிழா 

 

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கார்த்திகை பெருவிழா 

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நேற்று தொடங்கிய கார்த்திகை பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை பெருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான கார்த்திகை பெரு விழா நேற்று தொடங்கியது. 

hanuman

இதனைஅடுத்து பெரிய, சிறிய மலைகளில் உள்ள கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது . அதனையடுத்து தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களும் வந்து மலையடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 

hanuman

கார்த்திகை பெருவிழாற்காண ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் சேர்ந்து மிகவும் விரிவாக மேற்கொண்டு இருந்தனர்.

பக்தர்கள் வருகையொட்டி  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோயில், மலையடிவார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.