சோம தீர்த்தத்தில் நீராடி புதனை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்..பாடல் பெற்ற தலங்கள் வரிசை -11, திருவெண்காடு

சோம தீர்த்தத்தில் நீராடி புதனை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்..பாடல் பெற்ற தலங்கள் வரிசை -11, திருவெண்காடு

சீர்காழியில் இருந்து பூம்புகார் போகும் சாலையில் 13 வது கி.மீட்டரில் இருக்கிறது திருவெண்காடு.ஆதி சிதம்பரம், சுவேதாரண்யம்,பேரரங்கம் என பல பெயர்கள் கொண்டதலம்.காசிக்கு இணையாக சொல்லப்படும் காவிரி கரை தலங்கள் ஆறில் இதுவும் ஒன்று. 

மணிகர்ணிகை ஆற்றின் தென்கரையில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.கிழக்கு மேற்காக 792 அடி,வடக்கு தெற்காக 310 அடி என,245,520 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் பேராலயம்.வடக்கு வாயிலிலும் தெற்கு வாயிலிலும் இரண்டு ஐந்து நிலை ராஜ கோபுரங்கள் உள்ளன.

temple

மூலவர் சுயம்பு லிங்கமாக ஸ்வேதாரண்யேசுவரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.அம்மன் பெரியநாயகி. தல விருட்சங்கள் ஆல்,கொன்றை, வில்வம்.தீர்த்தங்கள் சோம,சூரிய,அக்கினி தீர்த்தங்கள்.இங்கு மூன்று சிவ தீர்த்தங்கள் உள்ளன.அவை நடராஜர்,சுவேதாரண்யேசுவரர்,அகோர மூர்த்தி.இந்த அகோரமூர்த்தி சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று.அதை இங்கு மட்டுமே காணலாம்.

இத்தலம் ஆதி சிதம்பரமாகும்.ஈசன் இங்கு,ஆனந்தத் தாண்டவம், காளி நிருத்தம்,கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுரதாண்டவம்,புஜங்க லலிதம்,ஸம்ஹார தாண்டவம்,புஜங்க லலிதம் ஆகிய ஒன்பது நடனங்களை இங்கு ஆடியிருக்கிறான்,ஆட வல்லான்.

temple

நவக்கிரக தலங்களில்,இது புதன் தலம்.இங்கு புதனுக்கு தனிச் சந்நிதி உண்டு. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று,இங்கே பிரம்ம சமாதி இருக்கிறது. பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம். தேவாரப்பதிகம் பெற்ற தலங்களில் இது பதினொன்றாவது.திருஞான சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் பதிகம் பெற்றது. சைவ எல்லப்ப முதலியார் தலபுராணம் இயற்றி இருக்கிறார்.

இதுவரை 95 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 6 கால பூஜை நடைபெறுகிறது.மாசிமாதத்தில் இந்திரவிழா,வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றி 11 நாள் உற்சவம் நடத்தப்படுகிறது.இங்குள்ள சோம தீர்த்தத்தில் நீராடி புதனை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு