சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பார்சிலோனா: சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா 1 மாடலை போலவே இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களிலும், எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. எக்ஸ்பீரியா 10 விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என்றும், எக்ஸ்பீரியா 10 பிளஸ் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்.பி வைடு-ஆங்கிள் கேமரா, 5 எம்.பி கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 2870 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 12 எம்.பி வைடு-ஆங்கிள் கேமரா, 8 எம்.பி கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.