சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ராவை நெருக்கும் அமலாக்கத்துறை: நடப்பது என்ன?

 

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ராவை நெருக்கும் அமலாக்கத்துறை: நடப்பது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராபர்ட் வத்ராவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள ராபர்டுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்பாக அவரது வழக்கறிஞர் சுமன் கூறுகையில், “சோதனை மேற்கொள்வதற்கான உத்தரவு ஆவணத்தை காண்பிக்காமல் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு உள்ளிருப்பவர்களை சிறை அமலாக்கத்துறை வைத்திருக்கிறது. நான்கரை ஆண்டுகளாக கிடைக்காத ஆதாரத்தை அதிகாரிகளே உருவாக்குகின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது தான் சட்ட நடைமுறையா? என்றும் ராபர்ட் வத்ராவின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, ராணுவத் தளவாடங்களை வழங்குபவர்களிடமிருந்து ராபர்ட் வத்ராவின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்திருப்பது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.