சோனியா காந்தி தொகுதியில் களமிறங்குகிறார் மோடி

 

சோனியா காந்தி தொகுதியில் களமிறங்குகிறார் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

அலகாபாத் : உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

வருகிற மக்களவைத் தேர்தலில், காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையான சவாலை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரே பரேலி தொகுதிக்கு முதன்முறையாகப் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு  அதிநவீன சொகுசு ரயிலான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார். இதையொட்டி ரே பரேலிக்கு சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரயிலின் சோதனை ஓட்டத்தையும், விழா அரங்கையும் பார்வையிட்டார்.

முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவரான சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக தமது தொகுதிக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.