சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு….. டெல்லி மருத்துவமனையில் அனுமதி……

 

சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு….. டெல்லி மருத்துவமனையில் அனுமதி……

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் நேற்று இரவு 7 மணி அளவில் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: 73 வயதாகும் சோனியா காந்திக்கு நேற்று திடீரென தாங்க முடியாது வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கங்கா ராம் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.  

சர் கங்கா ராம் மருத்துவமனை

மருத்துவமனையில் சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி உள்ளனர். இவ்வாறு  தெரிவித்தனர். அதேசமயம் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக சோனியா காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோனியா காந்தி உடல் நலம் எப்படி உள்ளது மற்றும் அவர் எப்போது வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் என்ற தகவல் சரியாக தெரியவில்லை. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பிரியங்கா மற்றும் ராகுல்

கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று சோனியா காந்தி நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளதாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.