சோனியா அகர்வாலின் “தனிமை” டீசர் நாளை ரிலீஸ்!

 

சோனியா அகர்வாலின் “தனிமை” டீசர் நாளை ரிலீஸ்!

நடிகை சோனியா அகர்வால் நடித்து வரும் “தனிமை” படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. டீசரின் அறிவிப்பை படத்தின் 2வது லுக் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

நடிகை சோனியா அகர்வால் நடித்து வரும் “தனிமை” படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. டீசரின் அறிவிப்பை படத்தின் 2வது லுக் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

இயக்குநர் செல்வராகவன் மூலம் தமிழில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். இதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் 7/ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், செல்வராகவனை தனது காதல் கணவனாக்கினார். அதன் பிறகு யார் கண் பட்டதோ தெரியவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்த சோனியா அகர்வால், விவேக்கிற்கு ஜோடியாக பாலக்காட்டு மாதவன் படத்தில் நடித்தார்.

soniya agarwal

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவராமன் என்பவரது இயக்கத்தில் அவர் “தனிமை” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டு உருவாகிவரும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இப்படத்திற்கு “மன்மதராசா” பாடல் புகழ் தினா இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.