சொமேட்டோவுக்கு அடுத்த தலைவலி! – 8000 ஹோட்டல்கள் எதிர்ப்பு

சொமேட்டோவுக்கு அடுத்த தலைவலி! – 8000 ஹோட்டல்கள் எதிர்ப்பு

சொமோட்டோவுக்கு நாடு முழுக்க 8000 ஹோட்டல் உரிமையாளர்களைக் கொண்ட தி இந்தியன் ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சொமோட்டோவுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அறிவித்துள்ளன.
உணவுகளை ஹோட்டல்களில் இருந்து பெற்று வாடிக்கையாளருக்கு வீடு தேடி வந்து வழங்கும் சொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் சொமோட்டோ கோல்ட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில், உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

zomato

இது குறித்து அந்த அமைப்பின் சந்தோஷ் ஷெட்டி கூறுகையில், “சொமோட்டோவின் கோல்ட் டெலிவரி திட்டத்தை நாங்கள் ஏற்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டோம். அந்த திட்டத்தை நிறுத்தும்படி கூறியிருந்தோம். ஆனால், சொமேட்டோ நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. 
இந்த திட்டத்தில், நாம் வாங்கும் உணவு பொருளில் விலை உயர்ந்த ஒன்றுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இப்படி ஒவ்வொரு முறை ஆர்டர் செய்யும்போதும் அவருக்கு ஒரு டிஷ் இலவசமாக அளிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“சொமோட்டோ டைன் இன் சேவை பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யும்படி கூறியுள்ளோம். எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவரும் சொமோட்டோ சேவையை ரத்து செய்துவிடுவார்கள்” என்றார்.