சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ. 1,00,000 அபராதம் ! சுகாதாரம் இல்லாததால் மாநகராட்சி அதிரடி!

 

சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ. 1,00,000 அபராதம் ! சுகாதாரம் இல்லாததால் மாநகராட்சி அதிரடி!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவ மழைத் துவங்கி பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் கொசுக்களினால் பரவி வரும் டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பரவாமல் செய்வதற்கு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவ மழைத் துவங்கி பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் கொசுக்களினால் பரவி வரும் டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பரவாமல் செய்வதற்கு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  தேங்கிக் கிடக்கும் மழை நீரால் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

zomato

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் பயன்படுத்தப்படாத டெலிவரி பைகள்  மாடியில் வைக்கப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்த போது அதில், டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது என்றார்.