‘சொப்பன சுந்தரி’-க்கு தடை: பெண்ணிய ஆர்வலர்கள் போலீசில் புகார்!

 

‘சொப்பன சுந்தரி’-க்கு தடை: பெண்ணிய ஆர்வலர்கள் போலீசில் புகார்!

சன் குழும தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியை தடை செய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்ணிய ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சன் குழும தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியை தடை செய்ய காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்ணிய ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுப்பொலிவுடன் ஆரம்பமாகியுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ‘சொப்பன சுந்தரி’ என்ற நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

மாடல் அழகிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று இருக்கும் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாடல் அழகிகள் வரைமுறையின்றி அரைகுறை ஆடையுடன் வருவதுடன், அழகிகளின் செய்கைகள் ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்யக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்ணிய ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

soppana

பெண்களை ஆபாசமாகவும், மோகப் பொருளாகவுமே சித்தரிக்கும் இதுப்போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்வதே நல்லது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. மேலும், கலாச்சாரத்திற்கு அடையாளமாக திகழும் தமிழகத்தில் டிவி ஷோக்கள் மூலம் இத்தனை ஆபாசம் காட்டுவதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சிக்கு கட்டாயமாக தடைப்போட வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். குடுபங்கள் பார்க்கும் டிவி ஷோக்களில் இத்தனை ஆபாசம் தேவையா என்று பலரும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.