சொன்ன பேச்சு கேப்பியா மாட்டியா? கேரளாவின் காதை திருகிய உச்சநீதிமன்றம்!

 

சொன்ன பேச்சு கேப்பியா மாட்டியா? கேரளாவின் காதை திருகிய உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவை கேரளா மீறுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என கேள்விமேல் கேள்வி தொடுத்தது.

முல்லைப் பெரியார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கென தடைகோரிய மனுவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. ஆனால், தடையை மீறி, கேரளா மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் தொடர்ந்து கட்டுமான பணிகளை தொடர்ந்தது. புகைப்பட ஆதாரங்களுடன் இதனை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழகம் எடுத்துச்சென்று, கேரளா மீதான நீதிமன்ற அவமதிப்பை உறுதி செய்தது. பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குநர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், கேரள வனம், நீர்பாசனம், சுற்றுலா துறைகளின் செயலர்கள் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Mullai Periyar Dam

இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவை கேரளா மீறுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என கேள்விமேல் கேள்வி தொடுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய கேரள அரசு, இன்னும் 15 நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.