சொன்னா நம்புங்க! மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும்…..

 

சொன்னா நம்புங்க! மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும்…..

கடந்த அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும் என டீம்லீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையால் வேலைவாய்ப்பு நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு சிறப்பான வளர்ச்சி காணும் டீம்லீஸ் நிறுவனம் கணித்துள்ளது. டீம்லீஸ் நிறுவனம் தனது 2019 இரண்டாவது அரையாண்டுக்கான இரு-ஆண்டு வேலைவாய்ப்பு பார்வை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பு

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், 19 துறைகளில் 7-ல் பணியமர்த்தல் வளர்ச்சி காண தொடங்கியுள்ளது. ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் மருந்து, தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வர்த்தகம், தொழில்நுட்ப ஸ்டார்ப் அப் நிறுவனங்கள், கல்வி சேவைகள், கே.பி.ஓ., மின்சாரம் மற்றும் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஆட்கள் நியமனத்தில் வளர்ச்சி தென்படுகிறது.

வேலைவாய்ப்பு

அதேசமயம், தயாரிப்பு, பொறியியல் மற்றும் அடிப்படைகட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியஸ் எஸ்டேட், நிதி, நுகர்பொருள், வேளாண் உள்ளிட்ட 9 துறைகளில் வேலைவாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 19 துறைகளில் 8-ல் வேலைவாய்ப்பு உருவாக்கம் வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவில் மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7.12 சதவீதம் வளர்ச்சி காணும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.