சொன்னா நம்புங்க சொல்லுது புள்ளிவிவரம்! கடந்த ஜூலையில் புதுசா 14.24 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சுருக்காம்

 

சொன்னா நம்புங்க சொல்லுது புள்ளிவிவரம்! கடந்த ஜூலையில் புதுசா 14.24 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சுருக்காம்

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் புதுசா 14.24 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ.சி., ஓய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ. மற்றும் ஓய்வூதிய நிதியம் கட்டுபாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் புதிய சந்தாதாரர்களின் ஊதிய தரவு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. 

தேசிய புள்ளியல் அலுவலகம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், 2019 ஜூலை மாதத்தில் 14.24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தை காட்டிலும் அதிகமாகும். 2019 ஜூன் மாதத்தில் புதிதாக 12.49 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்து இருந்தது. 2017 செப்டம்பர் முதல் 2019 ஜூலை வரை இ.எஸ்.ஐ. திட்டத்தில் புதிதாக 2.83 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள்

நம் நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி  வரும் வேளையில், கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வந்துள்ள தகவல் மத்திய அரசுக்கு சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது.