சொந்த வண்டியையே திருட முயன்ற வங்கி மேலாளர் ! போதையில் காவலர் வாகனத்தை திருடியதால் பரபரப்பு !

 

சொந்த வண்டியையே திருட முயன்ற வங்கி மேலாளர் ! போதையில் காவலர் வாகனத்தை திருடியதால் பரபரப்பு !

சென்னையில் போலீசால் பறிமுதல் செய்யப்பட்ட தன் சொந்த வாகனத்தை திருடுவதாக நினைத்து காவலர் ஒருவரின் வாகனத்தை வங்கி மேலாளர் திருடிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது
சென்னை புதுப்பெருங்களத்தூரை சேர்ந்த அருண்ராஜ் என்பவர் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் சில தினங்களுக்கு முன்னர் பரங்கிமலை அருகே குடிபோதையில் வந்தபோது வாகன தணிக்கையில் இருந்த போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

சென்னையில் போலீசால் பறிமுதல் செய்யப்பட்ட தன் சொந்த வாகனத்தை திருடுவதாக நினைத்து காவலர் ஒருவரின் வாகனத்தை வங்கி மேலாளர் திருடிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது
சென்னை புதுப்பெருங்களத்தூரை சேர்ந்த அருண்ராஜ் என்பவர் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் சில தினங்களுக்கு முன்னர் பரங்கிமலை அருகே குடிபோதையில் வந்தபோது வாகன தணிக்கையில் இருந்த போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். ஆனால் அவர் அபராதம் செலுத்தவில்லை. அபராதம் செலுத்திவிட்டு மோட்டார் பைக்கை எடுத்து செல்லுமாறு கூறி பறிமுதல் செய்தனர். பைக் இல்லாமல் வீட்டிற்கு சென்றால் அம்மா திட்டுவார்கள் என்பதால் கிண்டி காவல்நிலையத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளார்.

cctv

பின்னர் யாரும கவனிக்காத நேரத்தில் தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு நைசாக புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் வாகன எண்ணை பார்த்தபோது அவரு அவருடையது இல்லை. புதுச்சேரி மாநில பதிவெண் இருந்தது. வாகனத்தை மாற்றி கொண்டு வந்துவிட்டதாக அப்போதுதான் போதையில் இருந்த அருண்ராஜூக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மீண்டும் காவல்நிலையம் சென்றால் திருட்டு வழக்கு பதிவார்கள் என்பதால் அந்த வாகனத்திற்கு தன்னுடைய வாகனத்தின் பதிவெண் ஸ்டிக்கரை ஓட்டியுள்ளார். பின்னர் அதை எடுத்துக் கொண்டு போய் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் விட்டுள்ளார்.
இதற்கிடையே வெளியூர் சென்றிருந்த அருண்குமார் என்ற பரங்கிமலை ஆயுதப்படை காவலர் கிண்டி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை தேடியுள்ளார். அது திருடப்பட்டது தெரியவந்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, வங்கி மேலாளர் வாகனத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் போலிசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்கு பதில் காவலரின் வாகனத்தை அருண்ராஜ் திருடிசென்றது தெரியவந்துள்ளது. போலீசுக்கு பயந்து வாகன எண்ணை மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
 

cctv

மதுபோதையில் வண்டி ஓட்டிவிட்டு, அபராதம் கட்டாமல் வண்டியை எடுத்துச் செல்ல முயன்றது, வேறு ஒருவர் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றது ஆகியவற்றிற்காக அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பொறுப்புள்ள வங்கி மேலாளர் அருண்ராஜ் இல்லாமல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என அவருடன் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.