சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்ற கர்ப்பிணி சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்த அவலம்! 

சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்ற கர்ப்பிணி சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்த அவலம்! 

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர் ஒருவர், சொந்த ஊர் நோக்கி நடந்தபோதே பிரசவித்ததும், பிறகு பச்சிளம் குழந்தையுடன் 160 கிலோமீட்டர் நடைபயணத்தைத் தொடர்ந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியதால் பல கோடி பேர் வேலைவாய்பை இழந்தனர். வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தற்போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். கையில் காசு இல்லாத காரணத்தால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரும் சாலை மார்க்கமாக நடந்து செல்கின்றனர்.

baby

அப்படி ஒரு தொழிலாளியான சகுந்தலா என்ற நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் ராகேஷ் கவுல் மற்றும் 4 குழந்தைகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து ஆயிரத்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். வழியிலே சகுந்தலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. சாலையோரத்தில் குழந்தை பெற்றெடுத்த சகுந்தலா, 2 மணிநேர ஓய்வுக்கு பின்னர், மீண்டும் மீதமுள்ள 160 கிலோமீட்டர் பயணத்தை பச்சிளம் குழந்தையுடன் தொடர்ந்துள்ளார். அவரை மத்திய பிரதேச மாநில சோதனைச்சாவடியில் பரிசோதித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் சொந்த ஊர் பயணத்தில் உச்சக்கட்ட வேதனை உணர்த்துவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.