சொந்த தாத்தாவோட வங்கியால் மோசடி நபர் என் அறிவிக்கப்பட்ட பிர்லா!

 

சொந்த தாத்தாவோட வங்கியால் மோசடி  நபர் என் அறிவிக்கப்பட்ட பிர்லா!

பத்தாயிரத்தில் இருந்து பத்து லட்சம் வரை தரும் கடன்களுக்கு மட்டுமே வங்கி வில்லனாக மாறி கடனை வசூலிக்கும். கோடிகணக்கில் கடன் வாங்கியவர்களுக்கு புது காதலனைப் போல கொஞ்சி கொஞ்சி கடன் கேட்கும். யூகோ வங்கி கெஞ்சியும் கொஞ்சியும் மிஞ்சியும் பார்த்தது, துட்டு மட்டும் வரவே இல்லை.

“ஆமா இவுரு பெரிய டாட்டா பிர்லா” – யாருடைய ஏழ்மையை பரிகாசம் செய்ய மொத்த இந்தியர்களும் எடுத்தாளும் ஆளுமைகள் டாட்டாக்களும் பிர்லாக்களும். டாட்டா எப்படியோ தெரியவில்லை. ஆனால், பிர்லாக்களுக்கு நேரம் சரியில்லை போல. ஆதித்யா பிர்லா, சிகே பிர்லா, யாஷ் பிர்லா என வெவ்வேறு கிளைகள் பரப்பி இக்குழுமங்கள் விரிவடைந்துவந்தாலும், பிர்லா என்ற ஆணிவேரால் இணைக்கப்பட்டவை. இவற்றில் தற்போது பிரச்னையில் சிக்கி இருப்பது யஷோவர்தன் பிர்லா.

Yashvardhan Birla

பார்ப்பதற்கு இந்திப்பட ஹீரோ மாதிரி இருக்கும் யஷோவர்தன், யாஷ் பிர்லா குழுமங்களின் தலைவர். இக்குழுமங்களின் ஆளுகைக்கு உட்பட்ட கம்பெனிக்காக யூகோ வங்கியில் வாங்கப்பட்ட கடனில் மொத்தம் 67 கோடி ரூபாய் இன்னும் திரும்ப செலுத்தப்படவில்லை. பத்தாயிரத்தில் இருந்து பத்து லட்சம் வரை தரும் கடன்களுக்கு மட்டுமே வங்கி வில்லனாக மாறி கடனை வசூலிக்கும். கோடிகணக்கில் கடன் வாங்கியவர்களுக்கு புது காதலனைப் போல கொஞ்சி கொஞ்சி கடன் கேட்கும்.

Birla Family Tree

யூகோ வங்கி கெஞ்சியும் கொஞ்சியும் மிஞ்சியும் பார்த்தது, துட்டு மட்டும் வரவே இல்லை. எவ்வளவோ கேட்டும் வழிக்கு வராத யஷோவர்தன் பிர்லாவை ‘கடனை திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்’ என அறிவித்துவிட்டது. அடாடா, அடுத்து என்ன நடக்கும்? ஒண்ணும் நடக்காது. என்ன, யஷோவர்தன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இனிமேல் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அது சரி, தாத்தாவோட பேங்க்னு ஏதோ சொன்ன மாதிரி ஞாபகம்…..அதுவா, ஒண்ணுமில்லை. இந்த யூகோ வங்கி இருக்குல்ல. அந்த வங்கிய ஆரம்பிச்சதே கன்ஷியாம்தாஸ் பிர்லாங்குற, யஷோவர்தன் பிர்லாவோட சின்ன பாட்டனார்.