சொந்த குடும்பத்தினரைக் கொன்று பரோலில் வெளிவரமுடியாத வாழ்நாள் சிறை!

 

சொந்த குடும்பத்தினரைக் கொன்று  பரோலில் வெளிவரமுடியாத வாழ்நாள் சிறை!

மிகவும் திட்டமிட்டு இந்தக் கொலைகளை ஹார்வி செய்திருப்பதால், வெளிஉலக வாழ்க்கையை அனுபவிக்கும் தகுதியை ஹார்வி இழப்பதாகக்கூறி நீதிபதி வாழ்நாள் சிறை தீர்ப்பளித்திருக்கிறார்!

செப்டம்பர் 2018, ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில், அதுவரை கண்டிராத கொடூரமாக கொலை செய்தி வெளியாகிறது. ஹார்வி என்கிற 25 வயது கணவன் அவனுடைய 41 வயது மனைவி மாரா, கைக்குழந்தைகள் உள்ளிட்ட மூன்று மகள்கள், மாமியார் என ஐவரை கொலை செய்துவிட்டு, ஐந்து நாட்கள் வரைக்கும் வீட்டிலேயே பிணங்களோடு வாழ்ந்திருக்கிறான். ஐந்து நாட்களுக்குப் பிறகு, வேறொரு நகரில் வாழும் தன் பெற்றோரிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவர்கள் உடனடியாக தங்கள் சைக்கோ மகனை போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

Mara, Harvey

ஆஸ்திரேலியாவை உலுக்கிய இவ்வழக்கில், மேற்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்படாத தண்டனையான, பரோலில் வெளிவரமுடியாத வாழ்நாள் சிறைத்தண்டனை ஹார்விக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் குழந்தைகளையும், மனைவியையும் கொன்ற கொலைகாரன், அடுத்த நாள் காலை மாமியார் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்து அவரையும் கொலை செய்திருக்கிறான். அவருக்கு அப்போது வயது 71. மிகவும் திட்டமிட்டு இந்தக் கொலைகளை ஹார்வி செய்திருப்பதால், வெளிஉலக வாழ்க்கையை அனுபவிக்கும் தகுதியை ஹார்வி இழப்பதாகக்கூறி நீதிபதி வாழ்நாள் சிறை தீர்ப்பளித்திருக்கிறார்!