சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா..உஷார்!

 

சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா..உஷார்!

“பேருந்துக் கட்டணங்கள் எல்லாம் ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது… லீவு விடுறதுக்கு மூணு மாசம் முன்னாடியே ரயில் டிக்கெட் எல்லாம் தீர்ந்து போயிடுது. நமக்கு எப்போதுமே கடைசி நேரப் பயண திட்டமிடல் தான்.  அதனால கார் வாங்கிட்டேன்” என்று உற்சாகத்துடன் வாழ்க்கையை வாழ்பவரா நீங்கள்? அப்போ இந்த கட்டுரை உங்களுக்குத் தான்…

“பேருந்துக் கட்டணங்கள் எல்லாம் ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது… லீவு விடுறதுக்கு மூணு மாசம் முன்னாடியே ரயில் டிக்கெட் எல்லாம் தீர்ந்து போயிடுது. நமக்கு எப்போதுமே கடைசி நேரப் பயண திட்டமிடல் தான்.  அதனால கார் வாங்கிட்டேன்” என்று உற்சாகத்துடன் வாழ்க்கையை வாழ்பவரா நீங்கள்? அப்போ இந்த கட்டுரை உங்களுக்குத் தான்…

car

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது, அந்த விபத்துக்களில் பெரும்பாலும் சிக்குவது கார்கள் தான். அதிலும், கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடைப்பெறுகிற விபத்துக்களே அதிகம். இதற்கான காரணங்களை நமது டாப் தமிழ் நியூஸ் நிருபர்கள் குழு களத்தில் இறங்கி ஆராய்ந்த போது சில விஷயங்கள் கவனத்திற்கு வந்தன. பெரும்பாலும் சாலை விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் கார்களாக மட்டுமே இருப்பதைப் போல, அவை 80 சதவிகிதம் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கிய கார்களாகவும் இருக்கிறது.

நிச்சயம் இந்தக் கட்டுரை நோக்கம் உங்களை அச்சுறுத்துவதற்காக அல்ல… நம் வாழ்க்கையையும், நம்மை நம்பி இருக்கும் குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை மட்டுமே..

car

1. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள்.அல்லது ,தினமும் எடுப்பவராக இருந்தாலும் அலுவலகத்திற்கு போகிறவர்களாக இருந்தாலும் டிராபிக்கில் சிக்கி,ஒரு குறிப்பிட்ட ஸ்பீடுக்கு மேல் வண்டி ஓட்ட முடியாத ஆட்களாக இருப்பார்கள். ஆதலால் திடீரென தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு வாகனத்தில் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.

2. சொந்த கார்களை பெரும்பாலும்  அடிக்கடி ஓட்டாததால் அவர்கள், காரின் டயர்கள் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது. இதில் ஏதாவது பிரச்சினைகள் எழுந்தாலும் சமாளிக்கத் தெரியாமல் திண்டாடுகிறார்கள். 

car

3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால், பழக்கம் இல்லாத சாலைகளில், எங்கே குழிகள் இருக்கிறது, எங்கே திரும்புவது என்பதெல்லாம் தெரியாததால் வேகமாக ஓட்டிக் கொண்டிருக்கும் காரைக் கட்டுபடுத்தத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். கட்டுப்பாடுகளை இழந்த கார் சாலையிலிருந்து திசை திரும்புகிறது.
4. தொடர்ந்து காரை ஓட்டாததால், ஆபத்தான காலங்களில் ப்ரேக்கை அழுத்துவதற்கு பதிலாக பதற்றத்தில் ஆக்ஸிலேட்டரை  அழுத்திவிடுகிறார்கள். இதனாலும் அதிகமாக வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

5. பெரும்பாலும், சொந்த வாகனத்தை இயக்குபவர்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடனுமே பயணங்களை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக கார் ஓட்டத் தெரியாத, நெருங்கியவர்களுடன் பயணம் மேற்கொள்கிறார்கள். முன் சீட்டில், கார் ஓட்டுபவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தூங்கி வழிபவர்களும் விபத்துக்கு மறைமுகமாக காரணம் வகிக்கிறார்கள்.

car

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. மற்ற கார்களை விட இதில் மைலேஜ் சற்று குறைவாகவே வரும் என்றாலும், நமது உயிர் பாதுகாப்பு மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது என்பதால், உங்களது கார் பயன்பாடு பற்றி தெளிவான முடிவோடு கார் வாங்குங்கள்.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது. துரிதமாக செல்ல வேண்டிய பயணங்கள் இருந்தால், தயவு செய்து உங்கள் காரை நீங்கள் ஓட்டாதீர்கள்.

car

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்தும் போது, ஒரு அரை மணி நேரம் செலவு செய்து, நல்ல மெக்கானிக்கிடம் சென்று டயர், சைகை விளக்குகள், ரேடியேட்டர், ப்ரேக் எல்லாம் சரியாக வேலைச் செய்கிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

4. லாரிகளின் பின்னாலும் பேருந்துகளின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. பெரும்பாலும் இவைகளில் ப்ரேக் விளக்குகள் எரிவது இல்லை.  அப்படியே நன்றாக எரிந்தாலும், இவர்கள், பின்னால் வரும் வாகனங்களைக் கண்டுக் கொள்வதுமில்லை, வழிவிடுவதுமில்லை. 

5. நான்கு  வழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்கு பாதை மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து விட்டு மாறவும்.

6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை  மறக்காமல் கவனிக்கவும்.

car

7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.தவிர,எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் கார் கம்பெனி அதிகப் பட்ச ஸ்பீட் என்ன  கொடுத்திருக்கிறதோ,அதில் பாதியளவு ஸ்பீட் வரைதான் பாதுகாப்பானது.

8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், 100 கி.மீ  ஒருமுறை இடையிடையே ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.

9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் சாப்பிடாமல், இரண்டு மூன்று தடவையாக பிரித்து சாப்பிடுதல் நலம். வயிறு நிறைந்தால், கார் ஓட்டும் வேகத்திற்கு தூக்கம் கண்களைத் தழுவ ஆரம்பிக்கும். தவிர, தொலை தூரப் பயணங்களில் இரண்டு மூன்று முறை ப்ரேக் எடுக்கும் போது மனசும், உடலும் ரிலாக்ஸ் ஆகிறது. 

10. குறிப்பாக மைதா மாவினால் சமைக்கப்படும் பரோட்டா வகையறாக்களையும், அசைவ உணவுகளையும் கார் ஓட்டும் போது தவிர்த்து விடுங்கள். 

car

பயணங்கள் நம் வாழ்க்கையை மேலும் குதூகலப்படுத்தவும், நம்மைச் சார்ந்தவர்களைப் பரவசப்படுத்தவும் மட்டுமே… நமக்குத் தெரிந்த சாகசங்களை அடுத்தவர்களின் உயிர்களோடு விளையாடிக் காட்டக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.