சொந்தமாக மொபைல் பிராஸசர்களை தயாரிக்கிறதா ஓப்போ நிறுவனம்?

 

சொந்தமாக மொபைல் பிராஸசர்களை தயாரிக்கிறதா ஓப்போ நிறுவனம்?

ஓப்போ நிறுவனம் சொந்தமாக மொபைல் பிராஸசர்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி: ஓப்போ நிறுவனம் சொந்தமாக மொபைல் பிராஸசர்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சக சீன உற்பத்தியாளர்களான ஹவாய் மற்றும் சியோமி ஆகியோரை போலவே ஓப்போ நிறுவனமும் சொந்தமாக  பிராஸசர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓப்போ தலைமை நிர்வாக அதிகாரியின் சிறப்பு உதவியாளர் அளித்த தகவலின்படி அந்நிறுவனம் சொந்தமாக பிராஸசர்களை உருவாக்கி வருவது குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி ஓப்போ நிறுவனத்தின் முதல் சொந்த பிராஸசர் ‘ஓப்போ எம்1 என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ttn

இந்த மொபைல் பிராஸசர்களை உருவாக்க மீடியாடெக் உள்ளிட்ட சில நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள ஓப்போ நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் சிஸ்டம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஓப்போ நிறுவனம் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக கடந்தாண்டு நடந்த ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் தலைமை செயல் அதிகாரி டோனி சென் கூறியது குறிப்பிடத்தக்கது.