சொந்தக்கையில் சூனியம் வைத்துக்கொள்கிறதா பாஜக : அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்?!

 

சொந்தக்கையில் சூனியம் வைத்துக்கொள்கிறதா பாஜக : அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்?!

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலை சொல்லி ஓட்டு கேட்பது, ராணுவ வீரர்கள் உடை அணிந்து பிரச்சாரம் செய்வது என பாஜகவினர் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சமல்ல. இந்நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான bjp.org ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஹேக்கர்கள் முடக்கும் அளவு பாஜகவின் ஐடி விங் அவ்வளவு மட்டமானதாக என்பது முதல் கேள்வியாக உள்ளது. பாஜக தீவிரமாக களத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து  வருகிறது. பாஜக இணையதளம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஓட்டை விழுந்துவிட்டது போல் பாவமாக சித்தரிக்கப்படுகிறது. பொய் செய்திகளை பரப்புவதில் பாஜக இணையதள செயல்பாட்டாளர்களுக்கு அதிக பங்குண்டு என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலி என்று பரப்பப்பட்டது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தேர்தல் நெருங்கும் வேளையில், பாவ நாடகம் போடுவது பாஜவின் வழக்கமாக இருக்கிறது என சமூக வலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.