சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாயை கைவிட்ட கொடூர மகன்! மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழும் தாய்

 

சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாயை கைவிட்ட கொடூர மகன்! மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழும் தாய்

கோவை மாவட்டம் ராக்கிப்பாளையத்தைச் சேர்ந்த பாலம்மாள் என்பவரின் மகன் அவரது சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். 

கோவை மாவட்டம் ராக்கிப்பாளையத்தைச் சேர்ந்த பாலம்மாள் என்பவரின் மகன் அவரது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட பாலம்மாள், தன்னிடமிருந்த நிலங்களை தனது மகன்கள் அவரது பெயர்களில் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். நிலங்களை பெற்று கொண்ட பின் தன்னை முறையாக பார்த்துக்கொள்ளாமல் இருப்பதாக பாலம்மாள் புகார் கூறினார். எனவே பத்திரப்பதிவை ரத்து செய்து தர வேண்டுமென அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். 

முதியவர்

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23-ன் படி, கணவரை இழந்து வாழ்ந்து வரும் பாலம்மாள் தன்னுடைய மகன்களுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தார்.