சொட்டைத் தலை அழகை குறைக்கிறதா? வழுக்கையை மறைக்க அற்புத மூலிகை போதும் !

 

சொட்டைத் தலை அழகை குறைக்கிறதா? வழுக்கையை மறைக்க அற்புத மூலிகை போதும் !

தலைமுடி உதிர்ந்து ஏற்படும் வழுக்கையை சரி செய்ய ஊமத்தங்காய் அதிக பங்கு வகிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.
முடி சொட்டையானவர்கள் எந்த பக்கவிளைவும் இல்லாத சக்தி வாய்ந்த மூலிகைகள் இருப்பதாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

bald

.

பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வாருங்கள். வாரம ஒருமுறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி இலை பொடி நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. முடியின் வளர்ச்சியையும் தூண்டும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன

hair

.
 
அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும். 
எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது 

hairloss

வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைத்து நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.