சொட்டு தண்ணீர் கூட போய்விடக் கூடாது… தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கேரளா!

 

சொட்டு தண்ணீர் கூட போய்விடக் கூடாது… தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கேரளா!

தமிழகத்திற்கு தண்ணீர் சிறிதும் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தோடு கேரள அரசு தொடர்ந்து பல நடவடிக்கை எடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
முல்லைபெரியாறு தொடங்கி, கேரளாவில் உற்பத்தியாகி அரபிக் கடலில் வீணாக கலக்கும் ஆறுகளை இணைத்து தமிகழத்துக்கு தண்ணீர் தரும் திட்டம் வரை பல திட்டங்களுக்கு கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது. தற்போது, கேரள மாநிலம் இடுக்கியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் தண்ணீர் தேனி மாவட்டத்துக்குள் நுழைந்து சுரங்கனாறு அருவியில் விழுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் சிறிதும் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தோடு கேரள அரசு தொடர்ந்து பல நடவடிக்கை எடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
முல்லைபெரியாறு தொடங்கி, கேரளாவில் உற்பத்தியாகி அரபிக் கடலில் வீணாக கலக்கும் ஆறுகளை இணைத்து தமிகழத்துக்கு தண்ணீர் தரும் திட்டம் வரை பல திட்டங்களுக்கு கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது. தற்போது, கேரள மாநிலம் இடுக்கியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் தண்ணீர் தேனி மாவட்டத்துக்குள் நுழைந்து சுரங்கனாறு அருவியில் விழுகிறது. தற்போது இந்த தண்ணீருக்கு வேட்டு வைக்க கேரள அரசு திட்டம் தீட்டி வருகிறது.

dam

இடுக்கியில் உள்ள செல்லார் கோவில் பகுதிக்கு உற்பத்தியாகும் இந்த தண்ணீரை அங்கேயே தேக்கிவைத்து படகு குழாம் அமைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இடுக்கி எம்.பி குரியாகோஸ் இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசியுள்ளார். இந்த தண்ணீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்க கேரளா பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகின்றனர். செல்லார்கோவில் அருகே தடுப்பணை கட்டி அங்கு படகு விட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தடுப்பணை கட்ட திட்டமிட்டனர்.

idukki

தேனி விவாசயிகள் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விஷயத்தை கேரள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையில் எடுத்துள்ளனர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எல்லைக்குள் இருக்கும் அந்த பகுதியை கேரளா கபளீகரம் செய்துவிடும் என்று தேனி மாவட்ட விவசாயிகள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.