சொகுசு பங்களாவுக்கு வரணும்… இளம்பெண்ணை மிரட்டிய பிரபல நிதிநிறுவன அதிபர்!

 

சொகுசு பங்களாவுக்கு வரணும்… இளம்பெண்ணை மிரட்டிய பிரபல நிதிநிறுவன அதிபர்!

தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகிறார்கள். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு என்று கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக மக்கள் வேலை வாய்ப்புகளையும் இழந்து வருகிறார்கள். இந்நிலையில் பலரும் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை அடைக்க முடியாமல், வீட்டை விற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகிறார்கள். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு என்று கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக மக்கள் வேலை வாய்ப்புகளையும் இழந்து வருகிறார்கள். இந்நிலையில் பலரும் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை அடைக்க முடியாமல், வீட்டை விற்று வருகிறார்கள். அப்படி ஒருவர் நிதிநிறுவன அதிபரிடம் வாங்கிய கடனுக்காக தன்னையே இழக்கும் அபாயத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் காளப்பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி. இவரது மகள் சித்ரா. சித்ராவின் மேற்கல்விக்காக அந்த பகுதியில் இருக்கும் அரசு வங்கி ஒன்றில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார்.

loan

சரிவர வருமானமில்லாத நிலையில், வங்கிக் கடனைக் கட்ட முடியாமல், கோவை ராம்நகரில் இருக்கும் ஸ்ரீஅசோசியேட்ஸ் என்ற பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷுடம் பணம் கடனாக வாங்கி, வங்கிக் கடனை அடைத்துள்ளார். வீட்டு பத்திரத்தை ராஜேஷின் நிதிநிறுவனத்தில் அடமானம் வைத்து ரூபாய் 22 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடன் வாங்கிய தேதியில் இருந்து சரியாக மூன்று மாதங்களுக்குள் அசலையும், வட்டியையும் சேர்த்து கொடுக்கச் சென்ற போது, ராஜேஷ் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினார். இது எல்லாம் பத்தாது, மேலும் ஐந்து லட்ச ரூபாய் சேர்த்து ரூ.30 லட்சம் கொடுத்தால் தான் வீட்டுப் பத்திரத்தைத் தரமுடியும் என்று மிரட்டியிருக்கிறார். ஆண் துணை இல்லாத வீடு என்பதால் செய்வதறியாது, சரி… வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தால் போதும் என்று ரூ.30 லட்சம் பணத்தையும் தயார் செய்து கொண்டு சென்றிருக்கிறார்கள்.
பணம் என்றால் தான் பிணமும் வாயைத் திறக்குமே… இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.35 லட்சம் தந்தால் தான் வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். கூடவே 3 அடியாள்களுடன் வீட்டிற்கு சென்று மிரட்டி வெற்றுப் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கியிருக்கிறார். இவர்களுக்குத் தெரியாமலேயே அந்தப் பத்திரத்தை இன்னொரு வங்கியில் ரூ.70 லட்சத்துக்கு அடமானமாக வைத்துள்ளனர்.

women

இது குறித்து கல்லூரி மாணவியான சித்ரா ராஜேஷிடம் கேட்டதற்கு,  நான் அழைக்கும் இடத்திற்கெல்லாம் வர வேண்டும்.. என்ன சொன்னாலும் செய்யணும், கூப்பிடும் போதெல்லாம் வரணும்… இல்லைன்னா உங்க அம்மாவை கொன்னுடுவோம்’ என்று தொலைப்பேசியிலும் வாட்ஸ்அப் மெஸேஜிலும் மிரட்டல் விடுத்துள்ளனர். தவிர, தனியாக கோவையில் இருக்கும் ஜங்கிள் ரிசார்ட்ஸுக்கும் வரச் சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும், அவரது தாயாரும் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.