சொகுசு காரில் வந்து கொள்ளையடிக்கும் வடமாநில பெண்கள்… அதிர்ச்சியில் தி.நகர் ஜவுளிக்கடை அதிபர்கள் !?

 

சொகுசு காரில் வந்து கொள்ளையடிக்கும் வடமாநில பெண்கள்… அதிர்ச்சியில் தி.நகர் ஜவுளிக்கடை அதிபர்கள் !?

24 நாலு மணி நேரமும் கடையைத் திறந்து வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்த திட்டத்தால் யாருக்கு பயனுள்ளதா இருக்கோ இல்லையோ வடமாநில கொள்ளையர்களுக்கு ரொம்ப வசதியா இருந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தக் கொள்ளை சம்பவம்!
சென்னை தி.நகரிலுள்ள வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அது

24 நாலு மணி நேரமும் கடையைத் திறந்து வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்த திட்டத்தால் யாருக்கு பயனுள்ளதா இருக்கோ இல்லையோ வடமாநில கொள்ளையர்களுக்கு ரொம்ப வசதியா இருந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்தக் கொள்ளை சம்பவம்!
சென்னை தி.நகரிலுள்ள வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அது.

t.nagar

கூட்டத்துக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.அதுவும் இரவு நேரத்தில் இன்னும் அதிகமாகவேதான் இருக்கும்.இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு பெண்கள் ஒரு ஆண் கடைக்குள் நுழைந்து ஸ்ட்ரைட்டா பட்டு சேலை செக்சனுக்கு போயிருக்கிறார்கள்.
வந்திருந்த பெண்களின் உடை,தோற்றம் எல்லாத்தையும் பார்த்த ஊழியர்கள் யாரோ சௌகார்பேட்டை சேட்டு வீட்டுப் பெண்கள் போல என்று பிரமாதமாக வரவேற்று,லட்சத்துக்கு மேல் விலையுள்ள சேலைகளாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

theif

கிட்டத்தட்ட கடையில் இருந்த அத்தனை பட்டுப்புடவையையும் பார்த்த அந்தப் பெண்கள் நீண்ட நேரத்திற்குப் பிறகு,எதுவுமே பிடிக்கல என்று தங்களுக்குள்ளேயே இந்தியில் பேசியபடி அங்கிருந்து வெளியேறிப் போக முயற்சித்திருக்கிறார்கள்.கடை ஊழியர்களுக்கு மைல்டா சந்தேகம் வர,சக ஊழியர்களின் உதவியோடு தனியறைக்கு அழைத்துப்போய் சோதனை போட்டதில் கடையில் இருந்த ஊழியர்கள் அதனை பேரும் மயங்கி விழாதது மட்டும்தான் பாக்கி..!
மாடன் சுடிதாருக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பட்டுப்புடவைகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒவ்வொரு சேலையும் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகம்.
உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல… உடனடியாக அங்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், 4 பெண்களிடமும் 2 ஆண்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சொன்ன அத்தனையும்  திடுக்கிடும் ரகங்கள்!
நான்கு பெண்கள்,இரண்டு ஆண்கள் என்று மொத்தம் ஆறு பேர். டெல்லியிலிருந்து சொகுசு கார்களில் சென்னைக்கு வந்து இதுபோல் விலையுயர்ந்த பட்டு சேலைகளை ஆட்டயப்போட்டு,அதைக்கொண்டு போய் டெல்லியில் டிஸ்கவுண்ட் போட்டு விற்று,அதில் வரும் பணத்தை ஆறு பேரும் பங்கு போட்டுக்கொள்வது வழக்கமாம்.

saree

கார் பார்க்கிங்கில் ஒரு ஆள்,வண்டியை எப்போது வேண்டும் என்றாலும் ஸ்டார்ட் பண்ற மாதிரி காத்திருப்பாராம்.மற்றவர்கள் கடைக்குள் போய் திருடிவிட்டு வந்ததும் மொத்தப் பேறும் எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்! இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால்,இந்தக்கடைக்கு வருவதற்கு சற்று முன்பு இன்னொரு கடைக்கும் புகுந்து இரண்டேகால் லட்சம் மதிப்புள்ள சேலைகளைத் திருடி காரில் வைத்துவிட்டு,மேற்கொண்டு டிசைன்ல பட்டுப்புடவை எடுக்க வந்துதான் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கும்பல் சிக்கிய தகவல் தெரிந்த பிறகுதான்,முதல் கடைக்காரர்களுக்கு திருட்டு நடந்த சம்பவமே தெரிந்திருக்கிறது.சிசிடிவி கேமெராவுக்கு தெரியாத அளவுக்கு படு சாமர்த்தியமாக செயல் பட்டிருக்கிறார்கள்.இவர்களை கைது செய்த போலீசார்,இவர்கள் குறித்து மேற்கொண்டு விபரங்கள் வேண்டும் என்று டெல்லி போலீசிடம் கேட்டிருக்கிறார்களாம்.
அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்…