சொகுசு காரில் பயணம் செய்த எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்!  சென்னை முன்னேறுகிறது மக்களே!

சொகுசு காரில் பயணம் செய்த எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்!  சென்னை முன்னேறுகிறது மக்களே!

தமிழகத்தில் தொழில்நுட்பம் புதிது புதிதாய் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது என்று பெருமைப்படும் நேரமாக தான் இருக்கிறது. சுஜித் விஷயத்தில் தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை என்று எல்லோரும் வாட்ஸ்-அப்பில் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். 

edapadi

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு விஷயத்தில் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல்  உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பெரு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. இந்த பிரச்னையை சரி செய்ய எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு, வழங்கப்படும் மானியம் என பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமயும் புத்தம் புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் வலம் வந்தார். தமிழகத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் கார்களை டெலிவிரி கொடுப்பதற்கான பணிகளை ஹூண்டாய் துவங்க இருக்கிறது. அதன்படி, சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டனர். தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உள்ளே அமர்ந்து சிறிது தூரம் பயணித்தனர். 

edapadi

மஹிந்திரா, டாடா உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தாலும், தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறப்பான அம்சங்களுடன் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா கார் வந்துள்ளது. இந்த கார்களின் விலை அதிகமாக இருந்தாலும், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் எல்லாமே சிறப்பம்சங்கள் தான். ஆனால், எலெக்ட்ரிக் கார் மாடல் என்பதால், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் பெறும் வகையில், முகப்பில் க்ரில் அமைப்பு இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரியர் டீஃபாகர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.