சொகுசுக் காரைத் திருடிய சிறுவர்கள்…! அதிர்ச்சியளிக்கும் அவலம்!

சொகுசுக் காரைத் திருடிய சிறுவர்கள்…! அதிர்ச்சியளிக்கும் அவலம்!

கன்னியாகுமரி மேற்கு ரத வீதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பரமசிவம் (36). இவர் நேற்றிரவு தனது டிராவல்ஸ் நிறுவனம் முன்பு தன்னுடைய சொகுசு காரை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், காலையில் வந்து பார்த்த போது இரவில் அங்கே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை காணவில்லை. சொகுசு காரைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பரமசிவம் பல இடங்களிலும் காரை தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் கார் கிடைக்காததால் வேறுவழியின்றி கன்னியாகுமரி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

car thieft

car theift in kanyakumari

பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், தென்தாமரைகுளம் அருகேயுள்ள தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்த அஜித் (21), சேர்மத்துரை (19) ஆகிய இளைஞர்கள் இந்தக் காரை திருடியிருப்பது தெரிய வந்தது. பின், காவல் துறையினர் இருவரையும் வலைவீசி தேடி வந்த நிலையில், கையில் பணம் இல்லாததால் திருடிய சொகுசு காரை நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு நிறுத்தி விட்டு, ரயில் நிலையத்தினுள் சென்ற இளைஞர்கள் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றுள்ளனர். அப்போது, ரயில்வே காவல் துறையினரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர்.

car theift small boy kanyakumari

ரயில்வே போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரியில் கொகுசு காரை திருடியதையும், பிக்பாக்கெட் அடிக்க முயன்றதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, ரயில்வே காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில், கன்னியாகுமரி காவல் துறையினர் நாகர்கோவில் ரயில் நிலையம் சென்று அவர்களிடமிருந்து சொகுசு காரை மீட்டனர். பின்னர், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அஜித் மீது எட்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் சேர்மத்துரை மீது கஞ்சா கடத்திய வழக்கும் காவல் நிலையங்களில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். 19 வயது சிறுவர்கள் சொகுசு காரைத் திருடி, கஞ்சா கடத்தி, தங்களது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வதை கவலையுடன் பார்த்துச் சென்றனர் அந்த பகுதி பொதுமக்கள்!