சைமா விருதுகள் 2019: விருதை தட்டி சென்ற கோலிவுட் பிரபலங்கள் இவர்கள் தான்?

 

சைமா விருதுகள் 2019: விருதை தட்டி சென்ற  கோலிவுட் பிரபலங்கள் இவர்கள் தான்?

தென் இந்திய சினிமா பிரபலங்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படும் சைமா விருது 2019 நேற்று தொடங்கியது. 

சைமா விருதுகள் 2019: விருதை தட்டி சென்ற  கோலிவுட் பிரபலங்கள் இவர்கள் தான்?

கத்தார்: தென்னிந்தியச்  சினிமா பிரபலங்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படும் சைமா விருது 2019 நேற்று தொடங்கியது. 

தென்னிந்தியச் சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருதுகள் கடந்த 7 ஆண்டுகளாக  வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா வரும் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. கத்தாரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியத் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த விருத்தி வழங்கும் விழாவில் தமிழ் பிரபலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது வடசென்னை படத்திற்காக தனுஷுக்கு வழங்கப்பட்டது.

கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக இயக்குநர் பாண்டிராஜூக்கு  சிறந்த இயக்குநருக்கான  விருதும், கனா  படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

மேலும், கன்னடத்தில் வெளியாகி வெற்றி படமாக அமைந்த கேஜிஎப் படத்திற்காக   யாஷ்-க்கு  சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளார்.

இதே போல் விஜய் தேவரகொண்டா, நடிகை கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஜெயம் ரவி யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் விருது வாங்கி குவித்துள்ளனர். 

சைமா விருதுகள் 2019 பட்டியல்: 

சிறந்த படம் – பரியேறும் பெருமாள் 

சிறந்த இயக்குநர் – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம் )  

சிறந்த நடிகர் – தனுஷ் ( வட சென்னை )  

சிறந்த நடிகர் விமர்சகர் வட ஜெயம் ரவி(அடங்கமறு )  

சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா )  

சிறந்த நடிகை விமர்சகர் விருது – த்ரிஷா ( 96 )  

சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் ( 60 வயது மாநிறம் ) 

 சிறந்த துணை நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா )  

சிறந்த வில்லன் பாத்திரம் – வரலட்சுமி சரத்குமார் ( சர்கார் )  

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (கோலமாவு கோகிலா )  

சிறந்த காமெடி – யோகிபாபு (கோலமாவு கோகிலா )

சிறந்த பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன் ( தானா சேர்ந்த கூட்டம்) 

 சிறந்த பின்னணி பாடகர் – அந்தோணி தாசன் –  (தானா சேர்ந்த கூட்டம்)  

சிறந்த பின்னணி பாடகி – தீக்‌ஷிதா வெங்கடேசன் (ரௌடி பேபி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர் டி ராஜசேகர் ( இமைக்கா நொடிகள் )  

சிறந்த அறிமுக இயக்குநர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )  

அர்ப்பணிப்பு விருது – பாடலாசிரியர் நா முத்துக்குமார்