சைக்கிள் வாங்க சிறு சிறுக சேமித்த பணம்…..ரூ.971ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்த 4 வயது சிறுவன்

 

சைக்கிள் வாங்க சிறு சிறுக சேமித்த பணம்…..ரூ.971ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்த 4 வயது சிறுவன்

ஆந்திர பிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ.971ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தாரளமாக நிதி அளிக்கும்படி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை ஏற்று பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மாநில அமைச்சர் வெங்கட்ராமையாவுடன் ஹேமந்த்

ஆந்திர பிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஹேமந்த் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய சம்பவம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் ஒன்றும் பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கவில்லை இருந்தாலும் தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்ததுதான் பெரிய விஷயம். விஜயவாடாவை சேர்ந்த சிறுவன் ஹேமந்த் சைக்கிள் வாங்க சிறு சிறுக சேமித்து வைத்து இருந்த ரூ.971ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். ததேபள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில அமைச்சர் வெங்கட்ராமையாவிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு முழுவதையும் ஹேமந்த் வழங்கினான்.

மாநில அமைச்சர் வெங்கட்ராமையாவுடன் ஹேமந்த்

மாநில அமைச்சர் சிறுவன் ஹேமந்தின் கனிவான இதயத்தை பாராட்டினார். மேலும் சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தார். ஒருவருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற பெரிய மனது உங்களுக்கு இருந்தால்  எந்த தடைகளும் வரம்புகளும் இல்லை. இது உண்மை என்பதை ஹேமந்தின் செயல் நிரூபணம் செய்துள்ளது.