சைக்கிள் கேட்ட தமாக-வுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு!

 

சைக்கிள் கேட்ட தமாக-வுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற தேர்தலில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த கட்சிக்கு அக்கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

tamilmaanilacongress

இந்த தேர்தலில் தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி கேட்டு பெற்றது. ஆனால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததால் சர்ச்சை எழுந்தது.

GK Vasan

இதையடுத்து, இரு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விதிமுறையை சுட்டிக் காட்டி தமாக-விற்கு சைக்கிள் சின்னத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வடை போச்சே என்ற நிலையில் இருந்த தமாக-வுக்கு தற்போது ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சையில் போட்டியிடும் தமாக வேட்பாளர் நடராஜன் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி; பண்ணையார் அம்மா பிரேமலதா டெரர்!