சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்ற இளைஞருக்கு ரூ.2000 அபராதம்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்ற இளைஞருக்கு ரூ.2000 அபராதம்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஹெல்மெட் இல்லாமல் சைக்கிள் ஓட்டிய இளைஞருக்கு கேரள போலீசார் ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: ஹெல்மெட் இல்லாமல் சைக்கிள் ஓட்டிய இளைஞருக்கு கேரள போலீசார் ரூ. 2000 அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கும்பாலாவில் இருக்கும் நெடுஞ்சாலையில் காசிம் என்பவர் சைக்கிள் ஒட்டி சென்றுள்ளார். அவர் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது அப்பகுதியில் இருந்த போலீசார் காசிமை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து காசிமிடம் ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் வேகமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பியதுடன் அவருக்கு  ரூ.2000 அபராதம் விதித்துள்ளனர். அதற்கு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காசிம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.ஆனால்  அதை கேட்க மறுத்த போலீசார் வலுக்கட்டாயமாக அவரிடம் ரூ.500க்கான ரசீதை கொடுத்துள்ளனர். அந்த ரசீதில்  ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் எண் இருந்ததை கண்டு காசிம் அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது அந்த ரசீதை சமூக வலைதளத்தில்  வெளியிட்டு   தனக்கு நேர்ந்தை காசிம் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.