சைக்கிளில் சென்றால் கூட ஹெல்மெட் அணிய வேண்டும்? அதிர்ச்சியூட்டும் வீடியோ.

சைக்கிளில் சென்றால் கூட ஹெல்மெட் அணிய வேண்டும்? அதிர்ச்சியூட்டும் வீடியோ.

சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் ஹெல்மெட் அணியாததால் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் ஹெல்மெட் அணியாததால் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Police

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்துவதன் பேரில் தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பகுதிக்கு உட்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணி வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சைக்கிளில் வந்த பள்ளி மாணவனை வழி மறுத்துள்ளார். ஏன் வழி மறித்தார் என புரியாத சிறுவன் திகைத்து நின்றுள்ளான். பிறகு, அச்சிறுவனிடம் ஹெல்மெட் எங்கே என்று கேட்டு, அவன் சைக்கிளை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டுள்ளார் சுப்பிரமணி. 

Police

மேலும், அந்த சிறுவனிடம் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவனுக்கு அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன, பின்னர், அந்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததும், நெடு நேரம் அவனை அங்கே காத்திருக்க வைத்து விட்டு பிறகு அவனிடம் சைக்கிளையும் சாவியையும் வழங்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.