சேவல்னா சத்தம் போடத்தான் செய்யும், சத்தம் போடாத சேவல் எங்கயிருக்கு?

 

சேவல்னா சத்தம் போடத்தான் செய்யும், சத்தம் போடாத சேவல் எங்கயிருக்கு?

ஏன்யா சேவல்னா கத்தத்தான் செய்யும், கத்தாத சேவல் எங்கிருக்கு என குரல்கொடுக்க, அந்த தீவில் சேவல் வளர்க்கும் மற்றவர்களும் கொரீனுக்கு ஆதரவாக திரள, “ஒலேரான் தீவு சேவல் வளர்ப்போர் நல்வாழ்வுச் சங்கம், ரிஜிஸ்டர்ட்” என போர்ட் மாட்டிவிட்டார்கள்.

பிரான்ஸ், ஒலெரான்  தீவுகளில் வசிக்கும் கொரீன் என்பவர், ஆசையாக ஒரு சேவலை வாங்கி, அதற்கு மாரீஸ் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்களான ஜூன் லூயிஸ் தம்பதிக்கு கொரீனின் சேவல் சத்தம் பிடிக்கவில்லை. தாங்கள் ஓய்வுகாலத்தில் தங்குவதற்காக, அமைதியான இப்பிரதேசத்தில் வீடுகட்டி குடிவந்தால், இந்த சேவல் இம்சிக்கிறது, இதற்கு ஒரு முடிவு கூறுங்கள் எசமான், எவ்வளவு ரூவா செலவானாலும் பரவால்ல என நீதிமன்ற வாசல் ஏறியிருக்கிறார்கள்.

Oleron Island, France

வந்ததே கொரீனுக்கு கோவம். ஏன்யா சேவல்னா கத்தத்தான் செய்யும், கத்தாத சேவல் எங்கிருக்கு என குரல்கொடுக்க, அந்த தீவில் சேவல் வளர்க்கும் மற்றவர்களும் கொரீனுக்கு ஆதரவாக திரள, “ஒலேரான் தீவு சேவல் வளர்ப்போர் நல்வாழ்வுச் சங்கம், ரிஜிஸ்டர்ட்” என போர்ட் மாட்டிவிட்டார்கள். தனியாக வந்தால் சண்ட செய்யலாம், சங்கம் வளர்த்து சண்ட செய்ய வந்தால், என்ன செய்வதென தெரியாமல், வழக்கு விசாரணை வந்தபோது ஜூன் லூயிஸ் தம்பதிகள் வாய்தா வாங்கி ஒதுங்கிக்கொண்டார்கள்.