‘சேவலுடன் தினமும் வாக்கிங் செல்லும் பெண்…’ புற்றுநோயால் துவண்டு போனவரின் வாழ்க்கையில் நடந்த மாற்றம்!

 

‘சேவலுடன் தினமும் வாக்கிங் செல்லும் பெண்…’ புற்றுநோயால் துவண்டு போனவரின் வாழ்க்கையில் நடந்த மாற்றம்!

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

நாயுடன் வாக்கிங் செல்வோரை சிங்கார சென்னையில் பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால்  ஒரு பெண் சேவலுடன் வாக்கிங் செல்கிறார் என்பது தான் வியப்பான செய்தி. சென்னை கீழ்பாக்கத்தில் வசிக்கும் தேவிகா கிருஷ்ணன் . இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

ttn

இதையடுத்து அதை செய்ய முடியாமல் தேவிகா தவித்த நிலையில் அவரது  மகள் ஷில்பா தாய்க்கு கோழி குஞ்சுகளை வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஒரு சேவல் தேவிகாவின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. லவ் குமார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சேவல் நாளடைவில் அவர் குடும்பத்தில் ஒரு மகனாக மாறியுள்ளது. லவ் குமாருடன் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்  தேவிகா அதனுடன் தனது பொழுதை  ஜாலியாக  கழித்து வருகிறார்.

 

ttn

தேவிகா மற்றும்  அவரது குடும்பத்துக்கு முத்தம் கொடுப்பது, கோபம் வந்தால் கொத்துவது என அந்த சேவல் படு ஜோராக அந்த வீட்டில் வலம்  வருமாம். பிள்ளைகள்  வளர்ந்து பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி வந்த பிறகு இதுபோன்ற செல்ல பிராணிகளே அவர்களின் உலகமாகி விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.